உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பெண் ஒப்பந்த ஊழியரை மானபங்கப்படுத்தியதாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,
தலைமைச் செயலகமோ, சாலை எந்த இடமாக இருந்தாலும் உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று உத்தரப்பிரதேச அரசு கூறுவதன் உண்மை நிலநவரம் இதுதான்.
ஒரு பெண் தனது பாலியல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வீடியோ எடுத்து வெளியிட வேண்டிய நிலைமை இருக்கிறது. அப்படியானால் அவர் எவ்வளவு பொறுமையாக காத்திருக்க வேண்டும்? எல்லா பெண்களும் அவருக்கு துணை நிற்போம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.