உலக பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா

உலக பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடடனர்.

காரைக்காலில் 63 நயன்மார்களில் ஒருவரும், பெண்பார் புலவர்களில் ஒருவருமானவரும் சிவபெருமாளால் அம்மையே என்று அழைக்கப்பட்டு சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார் அவரது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் அவரது திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர். அப்போது பக்தர்களுக்கு வழங்கிய அட்சதையை அவரவர் தலையில் தூவிக்கொண்டு காரைக்கால் அம்மையாரை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காரைக்கால் அம்மையாரை தரிசனம் செய்தனர். மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைத்தல் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

Translate »
error: Content is protected !!