ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசம் கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், போட்டியின் போது மல்யுத்த வீரர்ஒருவரின் கன்னத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென பளார் என்று அறைந்துள்ளார். மல்யுத்த வீரர் அதிர்ச்சியில் உறைந்து போனார். விழா மேடையில் அவர் பொறுமையிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
எம்பி அரைத்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஆனால், அதிக வயது காரணமாக கன்னத்தில் அறை வாங்கியவர் போட்டியில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தனக்கு எம்.பி.யை தெரியும் என்றும், போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னது அவர்தான் என்று விழா அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையறிந்த எம்.பி., பொறுமை இழந்து அந்த நபருக்கு அறை கொடுத்தார்.