அதிமுக VS திமுக.. திருச்சியில் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டி..! சூடு பிடிக்கும் அரசியல் களம்

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 8-இல் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2016 தேர்தலில் திருச்சி கிழக்கு (கே.என். நேரு), திருவெறும்பூா் (அன்பில் மகேஷ் பொய்யாமொழி), லால்குடி (செளந்தரபாண்டியன்), துறையூர் (ஸ்டாலின்குமாா்) ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக வென்றது

இதர 5 தொகுதிகளில் அதிமுக வென்றது. தற்போதைய தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தலா 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில், கடந்த முறை போட்டியிட்டு வென்ற அனைவருக்கும் திமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் ஸ்ரீரங்கத்தில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் பழனியாண்டிக்கு, மீண்டும் இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை தொகுதி மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூரில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றியை இழந்த கணேசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இம்முறை திமுக வேட்பாளராக எஸ். கதிரவன் களமிறக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி இந்த முறை திமுக உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய முசிறி தொகுதியை இந்த முறை திமுக வடக்கு மாவட்டச் செயலரான காடுவெட்டி தியாகராஜனுக்கு வழங்கியுள்ளது திமுக தலைமை.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி ), மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், அதிமுக சார்பில், 8 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். லால்குடி தொகுதி மட்டும் தமாகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதர 8 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருவெறும்பூரில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்பி . குமார், திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; மண்ணச்சநல்லூரில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி, திமுக வேட்பாளர் எஸ். கதிரவன்; முசிறி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம். செல்வராசு, திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன்; துறையூா் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் டி. இந்திராகாந்தி, திமுக வேட்பாளர் ஸ்டாலின்குமாா் போட்டியிடுகின்றனர். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளிலும் தலா 8 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரவெடிகள், மேள, தாளங்கள் முழங்க தொகுதி முழுவதும் வலம் வரத் தொடங்கியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!