அத்துமீறி காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதுஇதன்படி, இரு நாடுகளும் அதனை மதித்து அதற்கேற்ப நடக்க வேண்டும்.

 எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்களை சந்தித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றுஇந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா பிரிவில் மதியம் 12.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது

இந்திய நிலைகளை நோக்கி சிறியரக பீரங்கிகள் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தி வருகிறது. ஒருபுறம் பாகிஸ்தான் மண்ணில் வளர்ந்து வரும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை இந்திய ராணுவம் எதிர்கொண்டு வருகிறது

மறுபுறம் அந்நாட்டு ராணுவத்தின் இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இதனால், இயற்கை வளம் நிறைந்த காஷ்மீரில் வசித்து வரும் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

 

Translate »
error: Content is protected !!