இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மே முதல் கிழக்கு லடாக்கில் சீனாவும் இந்தியாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. மோதலைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க காங்கிரஸ் 740 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு கொள்கை மசோதாவை அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவில் மற்ற அம்சங்களுடன், லடாக் எல்லையில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டும் இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை நிறைவேற்றியது. இதில் இந்திய–அமெரிக்க காங்கிரஸ்காரரான ராஜா கிருஷ்ணமூர்த்தியின் தீர்மானமும் அடங்கி உள்ளது. அதில் அவர் சீனா இந்தியாவுக்கு எதிராக இராணுவ ஆக்கிரமிப்பை லடாக் எல்லையில் மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளிலும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டவுடன் சட்டமாக மாறும். இதற்கிடையே சமூக ஊடக நிறுவனங்களுக்கான சட்டரீதியான பாதுகாப்புகளை ரத்து செய்யாததால் இந்த மசோதாவை ஏற்க முடியாது என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இந்தச் சட்டத்தில் கையொப்பமிடுவதன் மூலம், சீனாவின் இந்தியா மீதான இராணுவ ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியை அமெரிக்க அரசு அனுப்பும்.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இந்திய மீதான ஆக்கிரமிப்போடு, தென் சீனக் கடல், கிழக்கு சீனக் கடல் மற்றும் பூட்டான் உள்ளிட்ட ஆதாரமற்ற பிராந்திய உரிமைகோரல்களை முன்வைக்க சீனா மேற்கொண்ட முயற்சிகள் ஸ்திரமின்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என்றும் அந்த மசோதாவில் மேலும் கூறப்பட்டுள்ளது. சீனா இப்பகுதியில் செயற்கையாக பல தீவுகள் மற்றும் திட்டுகளை உருவாக்கி இராணுவமயமாக்கியுள்ளது. இரு பகுதிகளும் தாதுக்கள், எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்கள் நிறைந்ததாகக் கூறப்படுகின்றன. மேலும் அவை உலகளாவிய வர்த்தகத்திற்கும் இன்றியமையாதவை என்பதால் சர்வதேச நாடுகளும் இதில் தொடர்ந்து தலையிட்டு சீனாவின் ஆக்கிரமிப்புகளுக்கு தடை போட்டு