அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவதாக “தேர்தல் ஆணையத்தில்” மம்தா பானர்ஜி மீது “பாஜக” புகார்

கொல்கத்தா,

அரசியல் லாபத்திற்காகத் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது நான்கு முதல் ஐந்து பேர் திடீரென்று தன்னை சூழ்ந்து கொண்டு கார் மீது தன்னை தள்ளிவிட்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பரப்புக் குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல். இதனால்தான் அந்தச் சமயத்தில் எனது அருகில் எந்தவொரு போலீஸ் அதிகாரியும் இல்லைஎன்று தெரிவித்திருந்தார். மேலும், காலில் கட்டுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படமும் வைரலானது.

இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்க பாஜக தனது ட்விட்டரில், “மம்தா மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலை ஒருவர் கூட நேரில் பார்க்கவில்லை. தங்களை அவமானப்படுத்தும் வகையில் குற்றஞ்சாட்டியதற்காக நந்திகிராம் மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் லாபத்திற்காக தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாகத் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. அதன்படி விரைவில் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மம்தா பானர்ஜியும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதியிலிருந்து அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

 

Translate »
error: Content is protected !!