இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன..? அதிகரிக்கிறதா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,070 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு,

* இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,57,72,400 பேர்

* கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,76,070பேர்

* இதுவரை குணமடைந்தோர்: 2,23,55,440 பேர்

* கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,69,077பேர்

* கொரோனா உயிரிழப்புகள்: 2,87,122 பேர்

* கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 3,874 பேர்

* சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 31,29,878 பேர்

* இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 18,70,09,792 பேர்

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,23,56,187 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுகடந்த 24 மணிநேரத்தில் 20,55,010 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!