இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 139- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 539- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். அதேபோல், 234- பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 04 லட்சத்து 13 ஆயிரத்து 417 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 2 லட்சத்து 25 ஆயிரத்து 449- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 570 ஆக உள்ளதுதொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் என்ணிக்கை 1 கோடியே 37 ஆயிரத்து 398- ஆக உள்ளது

Translate »
error: Content is protected !!