இந்தியாவில் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு குறைவு

இந்தியாவில் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் குறைத்து பதிவாகியுள்ளது.

புது டெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 72 நாள்களில் அளவிற்க்கு இல்லாத குறைந்த அளவாக 70 ஆயிரத்தி 421பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஒரேநாளில் மேலும் 3,921 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,74,305 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தற்போது  9,73,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!