ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருமாறு அனைத்து இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விட இருக்கிறார். அந்த நேரத்தில் பிரதமர் மோடி அனைவரையும் நேரில் சந்தித்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.