இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்.. ஒடிசா, பஞ்சாப், கோவாவில் தெளிவாக தெரிந்த “ஸ்ட்ராபெரி மூன்”

சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்து பெரிய நிலவாக தெரிவது தான் சூப்பர் மூன் என அழைக்கின்றனர். இந்தநிலையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்க கூடிய இந்த பெரிய நிலவு ஸ்ட்ராபெரி மூன் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த விஷயத்தில், பல மாநிலங்களில் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக இது சரியாகத் தெரியவில்லை. ஆனால், இந்த அழகான ஸ்ட்ராபெரி நிலவு நேற்று இரவு ஒரிசாவின்  பூரி நகரில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது.

கோவா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த சூப்பர் மூன் மிகத் தெளிவாகத் தெரிந்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் இது தான் இனிமேல் இந்த ஆண்டு சூப்பர் மூன் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!