ஏன் இப்படி பண்ற ஸ்டார்ட் ஆகிறு.. டிரைவர் நிலைமை..! டிரேட் மார்க் சிரிப்பை வெளிப்படுத்திய ஓ.பி.எஸ்.!

தேனி,

துணை முதல்வரும், போடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான .பி.எஸ் தனது பிரச்சாரத்தை துவக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை கடவுளே? என்பதே துணை முதல்வர் .பன்னீர் செல்வத்தின் நேற்றைய மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.

மற்றவர்கள் சப்தம் போடாமல் பிரச்சாரத்தை தொடக்கி, சூறாவளியாய் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஆரம்பமே தடையாக அமைந்துவிட்டது துணை முதல்வருக்கு. அப்படி என்னதான் நடந்தது? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே துணை முதல்வர் ஓபிஎஸ், அவர் போட்டியிட இருக்கும் போடி தொகுதியில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (மார்ச்.18) முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஷெட்யூல் பக்காவாக பிளான் போடப்பட்டது. .பி.எஸ்.ஸும் தனதுஅட்டாக்பிரச்சார வியூகங்களை ரெடி செய்து பலமுறை ரிகர்சல் செய்து மக்களை சந்திக்க ஆயத்தமானார்.

போடி தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை புதூர் பகுதியில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு பிரச்சாரம் தொடங்க வேண்டும் என்பதே ஷெட்யூல். பரப்புரைக்கு கிளம்புவதற்கு முன், போடிநாயக்கனூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக கூடத்தில், அந்த சமூகத்தினரிடம் .பி.எஸ். ஆதரவு கோரினார்.

இதையறிந்த அதே சமூகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர், சமூக கூடம் முன்பு திரண்டு .பி.எஸ்.க்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, உள்ளே சிக்கிய .பி.எஸ் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து வெளியேறினார்.

பிறகு, முல்லை நகரில் தட்க்ஷிணாமூர்த்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மக்களை பார்த்து கையசைத்துக் கொண்டே பரப்புரைக்கு தயாராக வைத்திருந்த வேனில் ஏறினார். எஞ்சினை டிரைவர் ஆன் செய்தால், அது என்ன கோபத்தில் இருந்ததோ, ஸ்டார்ட் ஆக மறுத்துவிட்டது. டிரைவரும் சாவியை இப்படி திருப்புகிறார், அப்படி திருப்புகிறார்.. வண்டி ஆன் ஆகவில்லை.

ஒருபக்கம் .பி.எஸ் டென்ஷனை கட்டுப்படுத்திக் கொண்டே சிரித்தபடி நிற்க, டிரைவருக்கோ வியர்த்து கொட்டிவிட்டது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பரப்புரை வேனின் .சி. ஆன் செய்து வைக்கப்பட்டிருந்ததால், வண்டியின் பேட்டரி வீக் ஆகி இயங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த .பி.எஸ்.. இனி இது வேலைக்கு ஆகாதுஎன்று வேறொரு திறந்தவெளி ஜீப்பை தயார் செய்ய உத்தரவிட்டார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்க, இல்லாத குட்டிக்கரணம் எல்லாம் அடித்த வேன் டிரைவர் மீண்டும் வண்டியை இயங்க வைக்க, அதன் பிறகு பரப்புரைக்கு கிளம்பிச் சென்றார் .பி.எஸ்.

மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டியவர், இரவு 8 மணியளவில் தான் எல்லா சிக்கலும் தீர்ந்து பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். ஆனால், இத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டும், .பி.எஸ்.ஸின் அந்த டிரேட் மார்க் சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங் ஆகவேயில்லை.

 

Translate »
error: Content is protected !!