பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதிகள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஒன்றிய பகுதிகளில் குக்கர் சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்..
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அவர்கள் பெரியகுளம் அருகே உள்ள ஊஞ்சம்பட்டி வடபுதுப்பட்டி ஜல்லிப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்..
மேலும் தேர்தல் அறிக்கையை பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். இதில் வீட்டுக்கு ஒருவருக்கு கட்டாயமாக அரசு வேலை வழங்கப்படும், ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படும், ஏழை பொது மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும், மேலும் பொதுமக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொதுமக்களிடம் உறுதியளித்து குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்..
இதில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் குள்ளபுரம் கணேசன் மாவட்ட பிரதிநிதி சசி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..