டெல்லியில் ஒமைக்ரான் நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
டெல்லியில் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே ஏற்றி, பயணிகள் நிற்க அனுமதிக்கவில்லை. அதே போல், மெட்ரோ ரயில்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏற வேண்டியுள்ளது.