கல்விச்செய்திகள்…

பள்ளிக் கல்வி– IGNOU பல்கலைக்கழகம் மூலம்  ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு (PGDET)- சார்ந்துபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

11 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்வு இன்றி மதிப்பெண் நிர்ணயிப்பது எப்படி என, உரிய விதிகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர்

எம்.பி.பி.எஸ்., மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நடப்பு ஆண்டு, ‘நீட்தேர்வை, ‘ஆன்லைன்வாயிலாக நடத்தும் திட்டம் இல்லை. வரும், ஜூன்ஜூலையில், வினாத்தாளில் கையால் எழுதும் வழக்கமான நடைமுறையிலேயே, தேர்வு நடத்தப்படும்என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அய்யா வைகுண்டசுவாமி யின் அவதார விழாவை முன்னிட்டு இன்று  கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி சட்டசபை தேர்தல் பணிகளில் இருந்து மதுரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,’ என மாவட்ட ஆட்சியரிடம்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!