காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை காலை புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 23ஆம் தேதி உருவான நிவர் புயல், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் இல்லாவிட்டாலும் கூட, பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் தற்போது மேலும் ஒரு புயல் உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் கடந்த 28ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இந்த புயலானது மேலும் வலுப்பெற்று நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

எனவே, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் அதீத கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வட தமிழக மாவட்டங்களில் கன மழையும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!