குஷ்புவை நோக்கி வந்த ஒரு குரல்…! ஏன் தம்பி ஏன் எந்த காலேஜ் நீங்க… பிரச்சாரத்தில் கலகலப்பு

சென்னை,

ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு கனஜோராக பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு குரல் குஷ்புவை நோக்கி வந்தது. காலேஜ் தேர்வுகளை கேன்சல் பண்ணுங்க என்று மாணவர் ஒருவர் சொன்னதைக் கேட்ட குஷ்பு, ஏன் தம்பி ஏன் எந்த காலேஜ் நீங்க என்று கேட்டு கலகலப்பாக பிரச்சாரம் செய்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் வேலைகளை சேப்பாக்கம் தொகுதியில் செய்ய ஆரம்பித்து விட்டார் குஷ்பு. தினசரியும் தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வந்தார். அந்த தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் ஆயிரம் விளக்குத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் குஷ்பு.

ஆயிரம் விளக்கு தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சிட்டிங் எம்எல்ஏ ஆதரவுடன் களமிறங்கியுள்ளார் குஷ்பு. நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்த குஷ்பு, அதே வேகத்தோடு தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.

வெற்றி விநாயகர் ஆலயத்தில் கும்பிட்டு விட்டு பிள்ளையாரின் ஆசியுடன் பிரச்சாரத்தை தொடங்கினார் குஷ்பு. சூளைமேடு பகுதியில் பிரச்சாரம் செய்த போது திடீரென்று குஷ்புவை நோக்கி வந்தது ஒரு மாணவரின் குரல். மேடம்…, செமஸ்டர் பரிட்சைகளை கேன்சல் பண்ணுங்க என்று சத்தமாக கேட்டார் அந்த மாணவர்.

குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்க்க, உடனே குஷ்பு ஏன் தம்பி ஏன் எந்த காலேஜ் நீங்க என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர், அதை மட்டும் நான் சொல்ல மாட்டேனே என்று சொல்லி மறைந்து கொண்டார்.

உடனே குஷ்பு ஏன் தம்பி இப்படி பண்றீங்க. கொரோனா காலத்தில் நிறைய ரெஸ்ட் எடுத்திட்டீங்களே என்று சொன்னார். அதற்கு அந்த மாணவர், ஸ்கூல் பசங்களுக்கு மட்டும் ஆல் பாஸ் போட்டீங்க. எங்களுக்கு மட்டும் ஆன்லைன் கிளாஸ்னு சொல்லி டார்ச்சர் பண்றாங்க என்றார்.

எந்த கல்லூரியைச் சேர்ந்தவர் என்று மாணவரிடம் மீண்டும் கேட்கவே உடனே சுதாரித்துக் கொண்ட மாணவர் அதை நிச்சயம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறி விட்டு நழுவி விட்டார். கடந்த மாதம் பிரேமலதாவிடம் ஒரு பிளஸ் டூ மாணவர் எங்களுக்கும் ஆல்பாஸ் போடச்சொல்லுங்க மேடம் என்று கோரிக்கை வைத்தார்.

இப்போது குஷ்பு விடம் காலேஜ் தேர்வுகளை ரத்து செய்யச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நடைபெறவில்லை. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் மட்டும் பள்ளிகளுக்கு செல்கின்றனர். 9 முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆல் பாஸ் போடப்பட்டு விட்டது. பிளஸ் 2விற்கு மட்டும் தேர்வுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!