கூகுளில் இனி இலவசமாக போட்டோ பேக்அப் செய்ய முடியாது; 2021ம் ஆண்டு ஜுன் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது போட்டோஸ் ஆப்பினை கடந்த ஐந்து வருடங்களாக அன்லிமிடெட் சேவையாக வழங்கி வருகிறது. இனி அப்படி வழங்கப்படாது என்று கூகுள் அறிவித்துள்ளது. தனது போட்டோஸ் செயலி தொடர்பாக புதிய கொள்கையை அது வெளியிட்டுள்ளது.
அதன்படி, கூகுள் போட்டோஸில் இரு வருடங்களுக்கு மேல் லாக்-இன் செய்யப்படாமலேயே இருக்கும் கணக்குகளின் டேட்டாவை மொத்தமாக அழிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 15 ஜிபி வரை மட்டுமே கூகுள் போட்டோஸில் இலவசமாக பேக்-அப் எடுக்க முடியும்.
இந்த 15 ஜிபி ஸ்டோரேஜ் என்பது கூகுள் ட்ரைவ், கூகுள் டாக்ஸ் என மற்ற சேவைகளுக்கும் பொதுவான ஒன்று. 2021, ஜின் 1ம் தேதிக்கு பிறகு 15ஜிபிக்கு அதிகமாக போட்டோ, வீடியோக்களை இதில் பேக்-அப் வைக்க வேண்டும் என்றால் நம்முடைய தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
—