கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியால் 90% பயனடைந்தவர்கள் அதிமுகவினர் மட்டுமே – கே.என் நேரு குற்றச்சாட்டு  

கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடியால் 90% பயனடைந்தவர்கள் அதிமுகவினர் மட்டுமேதிமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு குற்றசாட்டியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சி திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் கே .என் நேரு தலைமையில் ரூ 1.50 லட்சம் மதிப்பில் 2 நபருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள்கள் மடக்கு  சக்கர நாற்காலிகள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் போன்றவை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்பட்டதுவிழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே என் நேரு கடந்த 4 ஆண்டுகளில் அதிமுகவினர் விவசாய கடனுக்கு சென்றால் அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்பட்டது, திமுகவினர் யாருக்கும் விவசாய கடன் பெரிய அளவில் வழங்கப் படவில்லை எனவே அதனை முதல்வர் தள்ளுபடி செய்துள்ளார்,இதனால் 90% பயனடைவது அதிமுகவினர் மட்டுமே.

சசிகலா,இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துக்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது,ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் எதையும் தமிழக அரசு பறிமுதல் செய்ய வில்லை என்ற கேள்விக்கு ?

ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவருடைய சொத்துக்களை பொறுமையாக கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள் போல. இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தனித்து போட்டியிடுவேன் என கூறி உள்ளார் என்ற கேள்விக்கு ?

கூட்டணிக் கட்சிகளை நாங்களாக வெளியேற்ற மாட்டோம்,பாரிவேந்தர் அப்படி கூறியுள்ளார், தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது,அது அவர்களின் விருப்பம். திமுக தலைவர் மு. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு  அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் மூன்றாவதாக கூட்டணி அமைப்போம் என்று கூறியிருந்தார்? எனவே திமுகவுடன் நீதி மய்யம் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என சூசகமாக தெரிவித்தார்.

மேலும் ஐபேக் டீமுக்கும், எங்களுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. இதனால், திருச்சி மாநாடு தள்ளிப் போகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. எங்களை (திமுக) வெற்றிப் பெற வைக்கவே ஐபேக் டீம் பாடுபடுவதாக குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!