கேரளத்தில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை கேரளத்தில் வேகமாக பரவி வரும் சூழலில் நாள்தோறும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பினராயி விஜயன் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்,
மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளது. முறையான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும். ஆக்ஸிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உறுதி செய்யப்படும் எனத்தெரிவித்துள்ளார்.