கொரோனாவில் இருந்து மீண்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மேற்கு வங்க மாநிலத்தில் 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77).

கடந்த 18ம் தேதி இவர் கொரோனா பாதிப்பு காரணமாக கொல்கத்தா நகரில் உள்ள உட்லேண்ட்ஸ் தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது.

அதனையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுஇதனையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

இதுபற்றி உட்லேண்ட்ஸ் ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘புத்ததேவ் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் 93 சதவீத ஆக்சிஜன் அளவுடன் சுய நினைவுடன் இருக்கிறார்விழிப்புணர்வுடன், பேசவும் செய்கிறார்அவரது இருதய துடிப்பு விகிதம் நிமிடத்திற்கு 62 ஆக உள்ளதுஅவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

Translate »
error: Content is protected !!