கொரோனா சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்

கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கடந்த டிச.5ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அமைச்சருக்கு கொரோனா இருப்பது உறுதியானதோடு 95% நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்தி அவருக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால், சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அமைச்சர் காமராஜூக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு சென்று கண்காணித்து வந்தனர்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் , காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் 95% நுரையீரல் பாதிப்பு இருந்தும் அவர் மீண்டு வந்து மறுபிறவி எடுத்துள்ளார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தார். அதன் படி, அமைச்சர் காமராஜ் தொடர் சிகிச்சைக்கு பிறகு இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

Translate »
error: Content is protected !!