சசிகலாவுக்கு என்ன ஆச்சு? வெளியான புதிய தகவலால் பரபரப்பு

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு உடல் நிலை சரியில்லை என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட  நிலையில், இதுகுறித்து சசிகலா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் பரவின. அவரது சிறுநீரகங்கள் பாதிப்படைந்திருப்பதாகவும் சில சமூகவலைதளங்களில் தகவல் காட்டுத்தியாக பரவியது. இது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது. 

இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை பாதுகாவலர் வழியாக, வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் கடிதம் ஒன்றை அனுப்பி, சசிகலாவின் உடல் நிலை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். 

இந்த கடிதத்திற்கு சசிகலா தரப்பில் இருந்து பதில் கடிதம் ஒன்று வழக்கறிஞர் செந்தூர்பாண்டியனிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் ஏராளமானோர் பாதிப்புள்ளாகி இருப்பதை அறிந்து வேதனைப்படுகிறேன்.

நான் வணங்கும் கடவுளின் ஆசியாலும், என்னுடன் பிறவா அக்காவின் ஆசியாலும், அவரின் கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆசியாலும் நான் நன்றாக உள்ளேன். எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இணைய தளங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று, சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!