சசிகலா அரசியலை விட்டு விலகியிருப்பதால்… “முழு பலனையும் அனுபிப்பவர்கள் திமுகதான்”… அதிர வைத்த சர்வே..

சென்னை,

சசிகலா அரசியலை விட்டு விலகியிருப்பதால் அதிமுகவுக்குத்தான் லாபம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பலனை முழுமையாக அனுபவிக்கப் போவது திமுகதான் என்று நக்கீரன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக சின்னம்மா பெயரைச் சொல்லியே நாங்க குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்துள்ளோம். .தி.மு.. சின்னம்மாவை ஏற்காதவரை எதிரியான தி.மு.. எளிதில் வெற்றிபெறும்என்கிறார் .தி.மு.. தொண்டரான கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த கனக கருப்பையா என்பவர்.

இப்படித்தான் பலரும் கூறியுள்ளனராம் இந்த சர்வேயின்போது. பரபரப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் சசிகலா. சாதாரண ஜெயலலிதாவின் உதவியாளராக மட்டும் அவர் இருக்கவில்லை. உடன் பிறவா சகோதரியாக மட்டும் இருக்கவில்லை.

மாறாக அரசியல் சாணக்கியராகவும் அவர் திரைமறைவில் திகழ்ந்துள்ளார். அதை மறுக்கவே முடியாது. ஜெயலலிதாவின் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கும் சசிகலா நிச்சயம் காரணமாக இருந்துள்ளார். ஜெயலலிதா கருணாநிதி என்ற ஜாம்பவானை எதிர்த்து ஜெயலலிதாவால் அரசியல் செய்ய முடிந்தது என்றால் அதில் நிச்சயம் சசிகலாவின் பங்கும் பெரிதாக இருந்தது.

ஒரு வேளை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா வசம் தொடர்ந்து அதிமுக இருந்திருந்தால் அதிமுக இப்போது இவ்வளவு பலவீனமாக தேர்தலை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். திமுக இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்து விட்டுப் போய் விட்டார் சசிகலா. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஆனால் சசிகலாவின் முடிவால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நிம்மதிப் பெருமூச்சு விட்டன என்பதில் மாற்றமே இல்லை. அது உண்மையும் கூட. சர்வே இதுகுறித்து நக்கீரன் எடுத்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், சசிகலாவின் துறவறத்தால் திமுகவுக்குத்தான் லாபம் என்று 42 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது எதிர்பார்த்த ஒன்றுதான். உண்மையும் கூட..

சசிகலாவால் அதிகம் லாபமடைந்திருப்பது திமுகவாகதான் இருக்க முடியும். காரணம், சசிகலா ஆதரவு வாக்குகள் அதிமுகவுக்குப் போகாமல் திமுகவுக்குத்தான் திரும்பும். திமுக அதிமுகவுக்கு லாபம் என்று கூறியிருப்போர் 30 சதவீதம் உள்ளனர். இதுவும் வாஸ்தவம்தான். சசிகலா வந்ததும் அதிமுக உடையவில்லை. பெரிய அளவில் யாரும் அங்கு போகவும் இல்லை. இதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. சசிகலா துறவறத்தால் யாருக்கும் லாபம் இல்லை என்று 17 சதவீதம் பேரும், அமமுகவுக்கு லாபம் என்று 11 சதவீதம் பேரும் கூறியுள்ளனராம்.

 

 

Translate »
error: Content is protected !!