சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார்: டிடிவி தினகரன்

சென்னை,

சென்னை திநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது. உறவினர் என்ற முறையில் தான் சசிகலாவை பார்க்க வந்தேன்.

சசிகலாவுக்கு கூடிய தொண்டர்கள், மக்கள் கூட்டம், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மக்கள் மனதில் இருந்து வெளிப்படுத்துகிறது. கர்நாடகாவிலும், தமிழகத்திலும் தன்னெழுச்சியாக வரவேற்பு நிகழ்த்திய தொண்டர்களுக்கு நன்றி.

அம்மாவின் உண்மை தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் பொது மக்களுக்கு நன்றிவரும் சட்டப்பேரவை தேர்தலில் 2 பகுதிகளில் தான் போட்டியிடப் போவதாகவும் ஆர்கேநகர் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியை தேர்வு செய்திருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!