சசிகலா தி.நகர் வீட்டில் 3 மணி நேரம் ஆலோசனை….ஷாக்கில் அதிமுக!

சென்னை,

சசிகலாவுக்கு ஒரு வகையில் எடப்பாடியார் செக் வைத்தால், இன்னொரு வகையில் சசிகலா எடப்பாடியாருக்கு வேறு வகையில் செக் வைக்கும் வகையில் ஈடுபடுவதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது. சசிகலாவின் வருகையானது அதிமுக தலைமையானது பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

சசிகலா உள்ளே வந்தால், தன்னுடைய முக்கியத்துவமும், தனித்துவமும் குறைந்துவிடக்கூடும் என்று எடப்பாடியார் நினைப்பதாக தெரிகிறது. அதனால் ஒருசில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.. இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அரசாங்க சொத்துகளாக மாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தது, அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது, கொடநாடு டீ எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, ஹைதராபாத் திராட்சை தோட்டம் உட்பட, சசிகலா வகையறாக்களுக்கு தொடர்புடைய ஜெயலலிதாவின் சொத்துகள் மீதும் அடுத்தகட்டமாக கைவைக்க அதிமுக தலைமை ரெடியாகி உள்ளது.

இதெல்லாம் கேள்விப்பட்ட சசிகலா, எடப்பாடியாருக்கு நெருக்கடி தருவதற்காக வேறு ஒரு ரூட்டை கையில் எடுத்துள்ளார்.. ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கை, இப்போது தங்கியுள்ள தி.நகர் வீட்டிற்கு வரவழைத்தாராம்.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாம்.. அப்போது, தீபக்கிடம் தீபா மூலம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க சொன்னாராம்..

அதாவது, தங்களது பூர்வீக சொத்தான போயஸ் கார்டனை எடப்பாடியார் அபகரிக்க பார்க்கிறார் என்று தீபாவை பிரச்சாரம் செய்ய சொன்னாராம்.. ஏற்கனவே இதுசம்பந்தமாக வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் உள்ளது.. தீபக்தான் அந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் அதை நினைவகமாக மாற்றுவதற்குத் தடை விதித்த நிலையில், அந்த சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து எடப்பாடிக்கு சசிகலா பதிலடி கொடுக்க சசிகலா நினைக்கிறாராம். சசிகலாவின் இந்த மூவ் எடப்பாடியார் காதுகளுக்கு எட்டி உள்ளது.. இதை கேள்விப்பட்டு முதல்வர் அதிர்ந்து போய்விட்டாராம்.

இப்படி ஒரு நிலை வருவதற்கு காரணமே வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் தான்.. அன்னைக்கே கட்சி நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட கோடிகளை தீபக்கிற்கும், தீபாவிற்கும் தந்திருந்தால், இன்னைக்கு அவங்க சசிகலா பக்கம் சென்றிருப்பார்களா? என்று நொந்து கொண்டாராம்.

 

Translate »
error: Content is protected !!