சசிகலா விடுதலை தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில்

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவது, அதிமுகவில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுக்கு விசாரணைக்கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. அது முடிந்த பிறகே இதுபற்றி கூற முடியும்.

நீட் தேர்வு கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நீட் தேர்வை நடத்த வேண்டியதாகி விட்டது. அதேநேரம், அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக அரசால் வழங்கப்பட்டது.

இதன்மூலம், 313 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரவுள்ளனர். சென்ற ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 6 பேர் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறினார்.

Translate »
error: Content is protected !!