சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத ஒப்புதல்….மத்திய அமைச்சர் தகவல்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க 91 லட்சம் கடன் உத்தரவாத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்க அவசர கால கடன் உதவி (ECLG) திட்டத்தை  மத்திய அரசு அறிவித்தது. இதன்படி ஜனவரி 25-ம் தேதி வரையான காலத்தில் மொத்தம் 91 லட்சம் கடன் உத்திரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துமூலமாக அமைச்சர் நிதின் கட்கரி  பதில் அளித்தார். அதில், “நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் மொத்தம் 31,923 சிறு, குறு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு 5,21,746 கடன் உத்திரவாத ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இவை, சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க உருவாக்கப்பட்ட நிதியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க கொண்டு வரப்பட்டுள்ள ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அவசர கால கடன் உத்திரவாதத் தொகையும் அடங்கும்என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!