எல்லாரும் அவரை போல் துரோகம் செய்ய மாட்டார்கள்… திமுகவின் உறுதியான நம்பிக்கை…! பாஜக “நியூ பிளான்”

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்பு திமுகவை திக்குமுக்காட வைக்கும் திட்டங்களை பாஜக இப்போதே வகுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக உற்சாகமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது.

கருத்து கணிப்புகளை பார்த்துவிட்டு எப்படியும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு திமுக தேர்தலுக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் அதிமுகவும் கண்டிப்பாக தேர்தலில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. நிறைய நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம் கண்டிப்பாக அதிமுக ஹாட் டிரிக் அடிக்கும் என்று ஆளும் தரப்பு நம்புகிறது.

இப்படிப்பட்ட நிலையில் திமுகவில் இருக்கும் அதிருப்தி நிர்வாகிகளை பாஜக குறி வைத்து வருகிறதாம். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தங்கள் பக்கம் இந்த நிர்வாகிகளை இழுக்கும் திட்டத்தில் பாஜக இருக்கிறது என்கிறார்கள். திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பாஜக தரப்பு நீண்ட நாட்களாக பேசி வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

வேட்பாளர் பட்டியல் காரணமாக திமுகவில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை , தங்கள் உறவினர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். அவர்களை குறி வைத்து தூக்கும் திட்டத்தில் பாஜக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல., தேர்தலுக்கு பின்பும் திமுக எம்எல்ஏக்களை பாஜக பக்கம் இழுக்கும் திட்டங்கள் உள்ளன. போக போக எல்லாம் தெரியும் என்கிறார்கள்.

நான் பாஜகவோடு முன்பே பேசிக்கொண்டு இருந்தேன். திமுக எனக்கு சீட் கொடுத்தாலும் பாஜகவில் இணைந்து இருப்பேன் என்று பாஜகவில் சேர்ந்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் குறிப்பிட்டு இருந்தார். அப்படித்தான் திமுகவில் இருக்கும் சிலர் பாஜக உடன் பேசிக்கொண்டு இருக்க வாய்ப்புகள் உள்ளன. திமுகவில் டபுள் கேம் ஆடும் நிர்வாகிகளுக்கு பாஜக வலைவிரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் திமுக தரப்பில் விசாரித்தாலோ.. திமுகவில் அப்படி கட்சி மாறும் ஆட்கள் எல்லாம் யாரும் இல்லை. இப்போது வாய்ப்பு பெற்று இருக்கும் 173 திமுக வேட்பாளர்களில் 95% பேர் மூத்த தலைகள். பல கால திமுக உறுப்பினர்கள். 10 வருடம் ஆட்சியில் இல்லாத போதும் கட்சி மாறாத தலைவர்கள். அவர்கள் யாரும் திமுகவிற்கு துரோகம் செய்ய மாட்டார்கள்.

ஒரு சிலர் காசுக்கு ஆசைப்பட்டு மாறலாம். ஆனால் அது திமுக ஆட்சிக்கு வந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. திமுக விசுவாசிகளை பார்த்துதான் வாய்ப்பு வழங்கியது. ஆப்ரேஷன் கமலா போல தமிழகத்தில் நடக்க கூடாது என்பதை கணித்துதான் திமுக நம்பகமான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. இதை கருத்தில் கொண்டே 173 இடங்களில் நிற்கிறோம்.

எங்கள் பக்கத்தில் இருந்து நிர்வாகிகள் பாஜக செல்ல வாய்ப்பே இல்லை . டாக்டர் சரவணன் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் சென்றுவிட்டார் . அவர் பாரம்பரியமாக திமுகவில் இருந்தவர் இல்லை.. அதனால் அவரை வைத்து மற்ற திமுக நிர்வாகிகளை சந்தேகப்பட கூடாது, என்று திமுக வட்டாரங்கள் நம்பிக்கையாக பேசி உள்ளன.

 

Translate »
error: Content is protected !!