#சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மருந்து விற்பனையாளரை அதிகாரிகள் கைது செய்தனர்.
#தனது பங்களாவை இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரி நடிகை கங்கனா மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனு, 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
#அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
#ராசல் கைமா மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 868 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவகம் அடுத்த மாதம் (அக்டோபர்) திறக்கப்படுகிறது.
#தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் விவாதிக்க கோரி சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
#பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மேலும் அவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளதால் அவரை கட்சியில் சேர்த்துகொள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது
#புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 518 பேருக்கு கொரோனாபாதிப்பு-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,111 ஆக உயர்வு
#முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி-தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
#ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் எஸ்6 கைக்கடிகாரத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
#பாகிஸ்தானின் சட்டவிரோத வரைபடத்திற்கு கண்டனம் – ஷாங்காய் உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு
#ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கின்றன-சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
#உள்நாட்டு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவின் உதவியை நாடினார் பெலாரஸ் அதிபர்
#பாகிஸ்தானில், 6 மாதங்களுக்கு பின், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
#சீனாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ள நிலையில், தாவரங்கள் அடிப்படையிலான இறைச்சி உணவுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
#ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
#கடந்த 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு- அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்
#கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது- மத்திய உள்துறை அமைச்சகம்
#நீட் தேர்வில் மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து 97% வினாக்கள். மொத்தம் உள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகள் 11 & 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வை எழுதிய மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு.
#நாகப்பட்டினத்தில் சட்டக்கல்லூரி தமிமுன் அன்சாரி கோரிக்கை.-தனியார் சட்டக்கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசு அனுமதி தரும்-சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக்கல்லூரி அமைக்க தனியார் முன்வந்தால் , அவர்களுக்கு அனுமதி அளிக்க அரசு தயாராக உள்ளது- அமைச்சர் சி.வி.சண்முகம்
#2018-ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!-நாடு முழுவதும் 697 பேர் கைது செய்யப்பட்டு, 406 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!
#கடந்த 6 மாதங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மொத்தம் 47 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் 24 ஊடுருவல் முயற்சி நடைபெற்றுள்ளது- மத்திய உள்துறை அமைச்சகம்
#பாஐக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்னன் தனக்கு கொரோனா இருப்பதாக பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#பவானிசாகர் அணை : நீர்மட்டம் – 100.15 அடி, நீர் இருப்பு – 28.8 டிஎம்சி, நீர்வரத்து – 2,967 கனஅடி, நீர் வெளியேற்றம் – 2,950 கனஅடி
#செப்டம்பர் 21ஆம் தேதி முதல் கூடுதலாக 20 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு