கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் சிக்கினார்..!
# கோவை : கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்கப்பட்டனர். அவிநாசி சாலையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 11 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். இரவு உணவுக்காக 6 பேர் கொண்ட அறையை திறந்த போது வார்டானை தாக்கிவிட்டு 6 பேரும் தப்பி சென்றனர். இதில் 4 பேர் பிடிபட்ட நிலையில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
# டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம் என பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா நெகட்டடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என கூறியுள்ளது
# சென்னை: சென்னை கொடுங்கையூரில் கட்டிடத் தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த ஆனந்த்குமார் சாகுவை கட்டையால் அடித்துக் கொன்ற நண்பர் துக்னா சாகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
# மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த அபிஷேகட, ராஜ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்
# கரூர்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.26 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
# விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் நேற்றிரவு ஆமத்தூர் புதுராஜா(52) என்பவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வீராச்சாமி(64), நடராஜன்(50) ஆகியோரும் உயிரிழந்தனர்.
# விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ரொட்டி பாக்கெட் ஏற்றி வந்த லாரியில் 8,900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாழங்காடு சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது புதுச்சேரியில் வந்த லாரியில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 8,900 மதுபாட்டில்களை கடத்தி வந்த ஓட்டுனர் சத்தியநாராயணன் கைது செய்யப்பட்டு, லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
# டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் 16 கோடியே 6 லட்சத்துக்கு 84 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட 15 கோடி இலக்கைவிட கூடுதலாக சத்தீஸ்கரில் பணி வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தில உள்ளது
## ராமர் கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் பாஜகவினர் பணம் வசூலிப்பதை பற்றி கேள்வி எழுப்பிய தெலுங்கானா M.L.A வீட்டில் தாக்குதல் நடத்தும் பாஜகவினர்.