*ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த 6-ஆம் கட்ட தேர்தல் பரப்புரை ரத்து!.,
*இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜயபிரபாகரன் பேச்சு.,
*தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு வேட்பாளர், 38 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய முடியும். இத்தொகை, அரை நாளுக்கு கூட போதாது.,
*தேமுதிகவிற்கு இனிமேல் அழைப்பு விடுக்கமாட்டோம் – மக்கள் நீதி மய்யம்
*அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
*சென்னை இராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கே.என். இசக்கிராஜா மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
*மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள, 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
*அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் எல்.முருகன் சந்திப்பு.
*புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட பாமக முடிவு
*கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து, அனைத்துத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாளை முடிவு அறிவிக்கிறது திமுக…
*அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக எல்.முருகன் தகவல்!!!
*கோவை மாவட்ட அதிமுக அலுவலகம் இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவினர் போராட்டம்
*கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
*திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
*பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதியை ஒதுக்க அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு – தரையில் உருண்டு புரண்டு போராட்டம். தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனின் ஆதரவாளர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக குரல்.
*மதுரை உசிலம்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி
*அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து திமுகவினர் போராட்டம்
*பாமக போட்டியிடும் தொகுதிகள் – அதிகார பூர்வ அறிவிப்பு
*கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார்.
*திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
*20 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்தூர் தொகுதியில் திமுக உதயசூரியன் சின்னம் போட்டி
*அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கிய முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது…. ஐகோர்ட்..!
*தேர்தல் பிரசாரத்திற்கு சரக்கு வாகனங்களில் மக்களை அழைத்து செல்லக் கூடாது..! கூடுதல் தலைமை செயலர் உத்தரவு
*காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ..!
*அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வருகை
*சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக கட்சிக்கு முரசு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்