சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.
இன்று காலை 11 மணி அளவில் ஜெயலலிதா நினைவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மரியாதையை செலுத்தினர். கட்சி மூத்த உறுப்பினர்களும், மூத்த தொண்டர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அன்புடன் ஜெயலலிதாவுக்காக பிராத்தனை செய்தனர்.