ஜே.இ.இ முதன்மை தேர்வு மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி வெளியிடூ – மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

ஜே..முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

 ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். இந்த நிலையில் 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் தொடங்கும் தேதிகளை ஜனவரி 7-ம் தேதி மாலை ஆறு மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் அறிவிக்க உள்ளதாக மத்தியக் கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!