அரபு நாடான ஜோர்டானின் புதிய பிரதமராக Bishr al-Khasawneh என்பவரை நியமித்து மன்னர் அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த உமர் ரசாஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட மன்னர் அப்துல்லா நாட்டின் புதிய பிரதமராக தனது ஆலோசகராக இருந்து வந்த Bishr al-Khasawneh நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு கடிதம் எழுதி உள்ள அவர், புதிய பிரதமர் தனது மந்திரிசபையை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.