டில்லி சென்ற விவசாய சங்கத் தலைவரை போலீசார் கைது செய்து வைத்துள்ளார்

டில்லி சென்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை போராட்டத்திற்கு செல்லவிடாமல் டெல்லி போலீசார் கைது செய்து வைத்துள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டில்லி செல்வதைத் தடுக்கும் வகையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில் போலீசார் தொடர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் 07ம் தேதி டெல்லி போராட்டத்திற்கு செல்ல விடாமல் தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக கூறி அவரின் வீட்டின் வெளியே வந்து கரூர் பைபாஸ் சாலையில் எலிக்கறி தின்றும் போராட்டத்தில் ஈடுபட்டார் தன்னை டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் தமிழ்நாடு போலீஸ் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி வந்த நிலையில் ஏழாம் தேதி மாலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை செல்வதாக கூறி சென்றவர் உயர்நீதி மன்றத்திலிருந்து மதுரை விமான நிலையம் சென்று விமானத்தில் டில்லி சென்ற அய்யாக்கண்ணு டில்லி விமான நிலையத்தில் இருந்து கரோல்பார்க் வரை டில்லி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னர் கரோல் பாக் போலீசார் அய்யாக்கண்ணு வை கைது செய்து தற்போது வரை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் போராட்டத்திற்கு செல்ல விடாமல் தன்னை தடுப்பதாகவும் தன்னை உடனே போராட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் இடம் கேட்டபோது தங்கள் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழி காவல் நிலையத்தில் அடைத்து வைத்து உண்ண உணவு கொடுக்காமல் தண்ணீர் கொடுக்காமலும் வைத்துள்ளதாகவும் உடனே அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Translate »
error: Content is protected !!