டெல்லியில் போராடியவர்கள் விவசாயிகளே இல்லைதூண்டுதலின்பேரில் சேர்ந்த கூட்டம்
பாரதிய ஜனதா கட்சி
மதுரை மண்டல பொறுப்பாளர்,
மாநில பொதுச் செயலாளர்
திரு.இராம.சீனிவாசன் பேட்டி.
பாஜகவின் மதுரை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டத்தை குறித்த விரிவான விளக்கம் அளித்த அவர் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் யாரும் விவசாயிகள் அல்ல அவர்கள் மாபியாக்களின் தூண்டுதலினால் ஒன்று சேர்ந்த கூட்டம் இந்த வேளாண் சட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை அதேபோல் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் அபகரிக்கப்படும் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு திமுகவால் பரப்பப்பட்ட பொய்யான தகவல் தமிழகத்தில் திமுக மீது தான் அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட புகார்கள் அதிகம் உள்ளன என்று பாடியவர் தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற இருந்த பந்த் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
அதற்கு காரணம் தமிழக விவசாயிகளுக்கு நன்றாகவே இந்த சட்டம் குறித்த அறிவும் ஞானமும் இருப்பதாகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இந்த புதிய வேளாண் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று தங்களுடைய பரப்புரையில் இதை அவர்களே முன் வைத்ததாகவும் என்று அவர்களே அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது என்பது விவசாயிகளை ஏமாற்றுவதாகும் எனவே இந்த மாதம் 8ஆம் தேதி முதல் விவசாயிகளின் நண்பன் மோடி என்ற ஒரு அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த வேளாண் சட்டத்தை குறித்தும் மத்திய அரசினுடைய திட்டங்கள் குறித்தும் நேரில் அவர்களுக்கு விளக்க உள்ளதாகவும் இந்த அமைப்பு கடந்த 8ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கி இந்த மாதம் இறுதி வரை இந்த பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு ஒருபோதும் இந்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லைஅதைக் குறித்த அனைத்து விளக்கங்களும் அந்தந்த மொழிகளில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்படும் எனவே உண்மையான விவசாயிகள் யாரும் இதுவரை எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை எனவே டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் விவசாயிகள் அல்ல அவர்கள் காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம் என்றும் சாடினார்