“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” …காற்று தர குறியீடு அளவு 375 ஆக உள்ளன

டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மிக மோசமடைந்ததுடன், காற்று தர குறியீடு அளவு 375 ஆக உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தர குறியீடு அளவு 375 ஆக உள்ளதுஇதனால் ஒட்டுமொத்த டெல்லியின் காற்று தரம் மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

டெல்லியில் அதிக பனிப்பொழிவால் காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டதுஇதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்வோர் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்டெல்லியில் காற்று மாசுபாடு அளவும் அதிகரித்து வருகிறது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் மற்றும் தெளிவற்ற வானிலை போன்றவற்றால் வாகன மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அடர்பனியால் எதிர்வரும் வாகனங்களை குறைந்த தொலைவுக்கே பார்க்கும் திறன் உள்ளதுஇதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்துடனேயே இயங்கினஇன்று வந்து சேரவேண்டிய 10 ரெயில்களும் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன என வடக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

 

Translate »
error: Content is protected !!