டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நடிகர் தீப் சித்து

டெல்லி,

விவசாயிகள் போர்வையில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து, பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சீக்கிய மத கொடியையும் விவசாய கொடியையும் ஏற்றியதே பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மூவர்ணக் கொடியை கீழிறக்கி விட்டு, இந்தக் கொடிகளை ஏற்றியது கண்டனத்துக்குரியது என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது கொடி ஏற்றியவர் யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாபி திரைப்படங்களில் நடித்து, தற்போது விவசாய செயற்பாட்டாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும், தீப் சித்து என்பவர் தான் அந்தக் கொடியை செங்கோட்டையில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சன்னி தியோலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். மேலும் பிரதமர் மோடியுடன் தீப் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் தோன்றிய தீப் சித்து, விவசாயிகளின் நலனுக்காக பாடுபட போவதாகக் கூறி, சம்பு மோர்ச்சா என்ற விவசாய அமைப்பை உருவாக்கி உள்ளார். இதனை அறிந்தே, விவசாய சங்க தலைவர்கள் இவரை புறக்கணித்து வந்தனர்.

இவர் ஒரு ஆர்எஸ்எஸ் ஏஜெண்ட் என்றும் விமர்சிக்கின்றனர். தேவையில்லாமல் பேரணிக்குள் ஊடுருவி விவசாயிகளின் போராட்டத்தையே திசை திருப்பி விட்டதாகவும் தற்போது குற்றஞ் சாட்டுகின்றனர். மேலும் போராட்டத்தின் பெருமையை சிதைக்க, இந்த சதிகாரனை அனுப்பியது யார் என்ற சதி விரைவில் அம்பலத்திற்கு வரும் என்கிறார்கள்.

 

Translate »
error: Content is protected !!