தமிழகத்தில் இதுவரை ரூ.428 கோடி பறிமுதல்.. தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் – சத்யபிரதா சாகு

சென்னை.

தமிழகத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.428 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். பணம் சிக்கிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பணப்பட்டுவாடா பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில், சத்யபிரதா சாகு பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. நாளை தமிழகத்தில் சட்டசபை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அவர் அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது கூறியதை பாருங்கள். தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி கொண்டு சென்ற, ரூ428.46 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தல் ரத்து தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவுசெய்யும். திமுக பணப்பட்டுவாடா செய்வதாகவும் எனவே, கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் கடிதம் அளித்த நிலையில், சத்யபிரதா சாகு இவ்வாறு தனது பேட்டியில் குறிப்பிட்டார். தமிழகத்தில், ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு பண பட்டுவாடா நடைபெற்று வருகிறது.

விஐபி தொகுதிகள் என்றால் 3 ஆயிரம், சில இடங்களில் 5 ஆயிரம் வரை ஒரு ஓட்டுக்கு பணம் தரப்படுகிறதாம். கடந்த சட்டசபை தேர்தலில் கண்டெய்னர் நிறைய பணம் பிடிபட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தேர்தல்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த முறையும், தேர்தல் முறைகேடு பற்றி கரூர் மாவட்டத்திலிருந்துதான் அதிகப்படியான புகார்கள் வந்துள்ளனவாம்.

Translate »
error: Content is protected !!