தமிழக ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்! ‘வெளியே சொல்ல முடியாது’ என விளக்கம்…

தமிழக ஆளுநரை இன்று சந்திட்த்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இவ்விஷயத்தில், தமிழக அரசு மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் ஆளுநருக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சூழலி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, கேட்டுக் கொண்டார்.

ஸ்டாலினுடன் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் ஆளுநரை சந்தித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், “முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். பரிசீலித்து முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஏற்பட்டு வரும் காலதாமதத்திற்கான சட்ட விளக்கங்களையும் ஆளுநர் தந்தார். ஆளுநருடன் வேறுசில விஷயங்கள் பற்றியும் பேசினோம். அதை வெளியில் சொல்ல முடியாது” என்றார்.

Translate »
error: Content is protected !!