தமிழக எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வீடுகள், அலுவலகங்களில் சோதனை… சிபிஎம் கண்டனம்..!

சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் வெள்ளி கிழமை மாலை 4 மணிக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பின் பேரில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் தொடர்பாக எவ்வாறு இனம் காண்பது, அவற்றுக்கு எப்படி கூடுதல் பாதுகாப்பும் மேற்பார்வையும் செய்வது என்பது குறித்து ஒரு விளக்கபடத்துடன் பேசினார். பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் பல ஆலோசனைகள் கூறினர்

அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுமுகநயினார் பேசும்போது தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், தேர்தல்  நெருங்கிவரும் நேரத்தில் சோதனை நடத்தக்கூடிய ஏஜென்சிகள் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து வீடுகள்,  அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுகின்றன.

தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்ட தலைமைத் தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற்றுத்தான் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்றும் ஒரு தலைப்பட்சமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், நடைபெறுகிற தேர்தலில் ஒரு சமனற்ற போட்டியை உருவாக்கவும் நடக்கும் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வாளாவிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.

அதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நீங்கள் எழுத்துப்பூர்வ மாக புகார் அளித்தால் அதை தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். இதன்மூலம் இதுபோன்ற மத்தியக் குழுக்கள் வருவது அவரது கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது அவரது பதிலில் தெரிந்தது.

ஆறுமுகநயினாரின் இந்த வாதத்தை காங்கிரஸ் கட்சியின் நிவாஸ்,  திமுகவின் நீலகண்டன் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். பாஜகஅதிமுக தவிர பிறகட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தன. அதன்பிறகு கூட்டம் முடிவுற்றது. இந்தக் கூட்டத் தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜசேகர் கலந்து கொண்டார்.

Translate »
error: Content is protected !!