தாம்பரம் அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர் – நோயாளிகள் அவதி

சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், இன்றிரவு அல்லது நாளை அதிகாலை மகாபலிபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் தமிழகத்தை நெருங்கிவிட்டதால், சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகி வருகின்றன. சென்னை நகரில் தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கனமழையால், சென்னையை அடுத்த தாம்பரம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் இருக்கும் பகுதியில் மழை நீர் உட்புகுந்தது. இதனால், அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

புறநோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறி வரும் நிலையில், மழைநீரை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Translate »
error: Content is protected !!