திருச்சி மாவட்டத்திற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று வந்தது – மாவட்ட ஆட்சியர் தகவல்

சட்ட மன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்திற்கு வாக்கு பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவிலிருந்து இன்று வந்ததுதேவையை விட 40 சதவீதம் அதிக இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான திருச்சி மாவட்டத்திற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக இன்று மஹாராஷ்டிராவிலிருந்து வந்தது.

சீல் இடப்பட்டு அந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட வாகனத்தின் சீலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பிரித்தார்.அதனை தொடர்ந்து ,கண்ட்ரோல் யூனிட் ,வி.வி.பே.ட் ஆகியவற்றை அனைத்து கட்சியினருக்கும் காட்சி படுத்திய பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு,

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்ட மன்ற தொகுதிக்கு மொத்தம் 1220 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3490 கண்ட்ரோல் யூனிட்,4560 வி.வி.பே.ட் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக இன்று 570 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 230 வி.வி.பே.ட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.வரும் திங்கள் கிழமை  மீதுமுள்ளவை வர உள்ளது.தேவையை விட இவை 40 சதவீதம் அதிகமாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Translate »
error: Content is protected !!