திருச்சி மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார்

திருச்சி திமுக வின் வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்.இவர் குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமூகத்தை சார்ந்த பெண்களையும் இழிவாக பேசியும் காவல்துறையினரையும் தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்றும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த சமூகத்தினர் கண்டனக் குரலை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் அந்த ஆடியோ தான் பேசியது இல்லை என்றும், இன்று காலையில் இருந்து தவறான விஷமப் பிரச்சாரம் வேண்டுமென்றே அதிமுகவினரால் பரப்பப்பட்டு வருகிறது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
இது திட்டமிட்டே பரப்பப்படுகிறது.என் பெயருக்கும்,தி.மு.க பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தவே இந்த விஷம பிரச்சாரத்தை சிலர் செய்து வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். இது குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளோம் என தியாக ராஜன் பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

Translate »
error: Content is protected !!