தொகுதிப் பங்கீடு… திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை…!

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு நேற்று செய்யப்பட்ட நிலையில், திமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை இன்று நடைபெறவுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஈடுபட்டுள்ளது. பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்துள்ளது.

மறுபுறம் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுடன் திமுக தனது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், கூட்டணி கட்சிகளுடனான ஒற்றுமை சிதைவடையாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு என்று கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு நேற்று உறுதி செய்யப்பட்டது. அக்கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எண்ணிக்கையைவிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு லட்சியமே முக்கியம் என்றும் இதை அடிப்படையில் வைத்தே போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரன் தெரிவித்தார்.

அதேபோல திமுககாங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!