பாபர் மஸ்ஜித் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபர் மஸ்ஜித் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

1992ம் ஆண்டு அயோத்தியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக பாபர் மஸ்ஜித் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நிலையில், நில உரிமை வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றமும் அதனை தொடர்ந்து பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறுபான்மை இஸ்லாமியர் மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டதாகவும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதேநேரம் பள்ளிவாசலை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும் மத்திய அரசு மற்றும் நீதித் துறையை வலியுறுத்தி பாபர் பள்ளிவாசல் இடிப்பு தினமான இன்றையதினம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்தும், இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலமான பாபர் பள்ளிவாசலை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர். இன்றைய தினம் தமிழகம் முழுவதும் 128 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும், பாபர் பள்ளிவாசலை இடித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் மற்றும் உரிய நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் வருடம்தோறும் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Translate »
error: Content is protected !!