பீகார் மாநிலத்தில் சிற்பி செய்யும் நபர் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார்.
இதை பற்றி சிற்பி செய்யும் நபர் பிரகாஷ் கூறியது,
பிரதமர் மோடி நாட்டைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நான் உணர்ந்தேன். எனவே பணத்தை மிச்சப்படுத்த இதை செய்ய முடிவு செய்தேன். சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பணத்தை ரொக்கமாகவோ அல்லது நோட்டுகளாகவோ சேமிக்க முடியும் இந்த உண்டியல் செய்ய ஒரு மாதம் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதை நான் செய்தவுடன் சந்தையில் விற்க ஆரம்பித்தேன். உலகின் மிகச் சிறந்த எங்கள் பிரதமரைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க இதைப் பயன்படுத்தலாம் என்றும் இதுவரை எனக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிரகாஷ் கூறினார். அந்த உண்டியலில் அவர் உலகின் சிறந்த பிரதமரின் வார்த்தைகளை எழுதியுள்ளார்.