புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 25ம்தேதி வாக்காளர் அட்டை தரபடும் – ஆட்சியர் சிவராசு பேட்டி.

வாக்காளர் சிறப்புமுகாம்களில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்பார்வையாளர் சஜன்சிங் ஆர்.சவான், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வுபுதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 25ம்தேதி வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் ஆட்சியர் சிவராசு பேட்டி.

 திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2021 தகுதியேற்பு நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக முதல்கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 21, 22ம் தேதிகளில் நடைபெற்றதில், மொத்தம் 64,785 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 63,201 கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும், நாளையும் மறுநாள் 2 நாட்கள் 2ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

இதனிடையே இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஜன்சிங் ஆர்.சவான் திருச்சி மாநகரில் மன்னார்புரம் மற்றும் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நடைபெற்றுவரும் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் சிவராசுஜனவரி 20ம்தேதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்படும் என்றும், சேர்த்தல், மாற்றம் மற்றும் நீக்குதல் தொடர்பாக உரிய ஆவணங்கள் இருந்தால்மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படும். 2020வாக்காளர் பட்டியலின்படி இளம்வாக்காளர்கள் 90ஆயிரம் இருக்கவேண்டும். தற்போது 45ஆயிரம் மட்டுமே உள்ளனர், 28ஆயிரம் பேர் கடந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளனர் தற்போது நடைபெறும் முகாமில் 15ஆயிரம்பேர் எதிர்பார்ப்பதாகவும், அதன்படி 90சதவீதம் இளம்வாக்காளர்கள் சேர்ந்துவிடுவர், மேலும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு 100சதவீதம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 25ம்தேதி வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!